எந்தக் காரணத்துக்காகவும் படையினரை சிறையில் அடைக்கக் கூடாது! - என்கிறார் கோத்தா
19 May,2018
நாட்டிற்கு சேவையாற்றிய யுத்தவீரர்களை எந்த காரணத்திற்காகவும் சிறையில் அடைக்கக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 30 வருட உள்நாட்டு யுத்தத்தின்போது படையினர் செய்த தியாகங்களை மறக்ககூடாது. எனினும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவும் தீங்கிழைக்கும் நோக்கத்துடான குற்றச்சாட்டுகள் காரணமாகவும் படையினர் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். யுத்தவெற்றி வீரர்கள் பெருமளவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டு மக்களை படுகொலை செய்து வாழ்வாதாரத்தை சிதைத்த பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடும் அதேவேளை நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்த வீரர்கள் சிறையில் வாடுகின்றனர் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.