கொழும்புத் துறைமுக நகரத்திட்டம் காரணமாக இலங்கையின் பரப்பளவு 2.69 சதுர கிலோ மீற்றர் அதிகரித்துள்ளதாக நிலஅளவையாளர் பீ.என்.பீ.உதயகாந்த தெரிவித்துள்ளார். புதிய இலங்கை வரை படத்தின்படி சிலாபம் கடற்கரைப் பிரதேசம் குறைவடைந்துள்ளதாகவும் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பிரதேசம் மாறுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய துறைமுக நகரத்திட்டம் காரணமாக மாறுபடும் கொழும்பு வரைபடத்தை அச்சிடும் நடவடிக்கைகள் இம்மாதம் இறுதிக்குள் முடிவடையும் எனவும் அளவையாளர் திணைக்களம் தெரிவிக்கின்றது.