இலங்கையில் பேஸ்புக் அலுவலகம்!
08 Apr,2018
பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் நிறுவுமாறு அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. சிங்கள மொழியில் வெளியிடப்படும் சில தகவல்கள் ஊடாக இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 4ஆம் திகதி பேஸ்புக் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், அது நடைபெறவில்லை. எனினும் அவ்வாறான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும் போது, இலங்கையில் பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகத்தை திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளரும், தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளருமான ஒஸ்டின் பெர்னான்டோ பீ.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அலுவலகம் ஒன்றைத் திறந்து, அதில் இலங்கையர்களையும் பணியாளர்களாக இணைத்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.