இலங்கையின் புதிய வரைபடம் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது!
08 Apr,2018
கொழும்பு- துறைமுக நகரம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்களை உள்ளடக்கிய இலங்கையின் புதிய வரைபடம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று நில அளவையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், அதனை அச்சிடுவதற்கான வேலைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படுமென, நில அளவையாளர் திணைக்களத்தின் பணிப்பாளர் பீ.என்.பீ.உதயகாந்த தெரிவித்துள்ளார்.