ரணிலைக் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது! - சம்பந்தனை எச்சரிக்கும் அத்துரலிய ரதன தேரர்
30 Mar,2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளனர்.எதிர்க்கட்சித் தலைவருக்கு இவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அந்த கடிதத்தில் “நீங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் எதிர்க்கட்சித் தலைவர் அல்ல. முழு நாட்டுக்குமான எதிர்க்கட்சித் தலைவர். முழு நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே எதிர்க்கட்சித் தலைவரின் கடமை. கடுமையான குற்றச்சாட்டுக்களுடன் கூடிய யோசனையை ஒன்றை தோற்கடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்குமாயின் கூட்டமைப்பு பாரதூரமான அனர்த்தத்தை எதிர்நோக்க நேரிடும். இதனால், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
எத்தகைய பிரச்சினைகள் இருந்தாலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.“ எந்த சந்தர்ப்பத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை காட்டிக்கொடுக்க போவதில்லை . எமக்கிடையில் எப்படியான பிரச்சினைகள், நெருக்கடிகள் இருந்தாலும் ஐக்கிய தேசிய முன்னணியை காட்டிக்கொடுக்க போவதில்லை என அவர் கூறியுள்ளார்.