ரணிலைக் கவிழ்க்கும் பிரேரணையை கூட்டமைப்பு ஆதரிக்காது!
26 Mar,2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்காது என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. “நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது அதற்கு எதிராக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிப்பது என கட்சி தீர்மானித்துள்ளதாக பிரதமருக்கு கட்சி அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு கல்விச் சுற்றுலா சென்றிருக்கும் கட்சியின் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை மீள நாட்டுக்கு அழைத்து வரவும் கட்சி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ம் திகதி செல்வம் அடைக்கலநாதன் நாடு திரும்பவிருந்தார்.எனினும், அதற்கு முன்னதாகவே அவரை நாட்டுக்கு அழைப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.