கோத்தாவின் வழக்கு பிற்போடப்பட்டது
23 Mar,2018
தங்காலை வீரகெட்டிய டீ.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை நிர்மாணிப்பின் போது பண மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளியிட்ட 7 சந்தேக நபர்களுக்கெதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கை எதிர்வரும் ஜூலை 20ம் திகதி வரை பிற்போடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்டுக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மேலதிக நீதவான் சாந்தனி டயஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்திக்க நபர்களால் முன்வைக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவிற்கு எதிர்வரும் 26ம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதன் காரணமாக இவ்வழக்கை பிற்போடுவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.