உலகின் முதல் 50 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகத்திற்கு 23 ஆவது இடம்
14 Mar,2018
இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது.
உலகின் முதல் 50 துறைமுகங்களில் இலங்கை கொழும்பு துறைமுகம் 23 ஆம் இடத்தினை வகிக்கின்றது.
அதேபோல் கடந்த ஆண்டில் மாத்திரம் 6.1 மில்லியன் வருவாய் பெறப்பட்டுள்ளது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சில் இன்று அரச- தனியார் இணைந்த துறைமுக அபிவிருத்தி செயற்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
கொழுப்பு துறைமுகத்தை அரச -தனியார் ஒத்துழைப்பில் கையாண்டு அதன் மூலம் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை இலக்காக கொண்டதாக இந்த நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து செயற்படும் தனியார் துறைமுக நிறுவனங்கள் அனைத்தும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டன. இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்