இனவாதத்துக்கும் ராஜபக்ஷாக்களுக்கும் தொடர்பு இல்லை : மஹிந்த
11 Mar,2018
நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை ஏற்படுவதற்கு ராஜபக்ஷாக்கள்தான் காரணம் என பொய்யான பிரச்சாரம் ஒன்றை அரசாங்கத்திலுள்ள சிலர் பரப்ப முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்க அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன போன்ற சிலர் அரசாங்கத்தின் வங்குரோத்து நிலையை மூடி மறைப்பதற்கு ஒருவருக்கு ஒருவர் விரல் நீட்டிக் கொண்டு இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.
இன்றைய சகோதர மொழி வாரமஞ்சரியொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.