புலிகளை அழிக்க முஸ்லீம்கள் எங்களுக்கு நிறைய உதவி செய்தாங்க- சிங்களவர்களுக்கு விளக்கம் கொடுத்த தளபதி.
09 Mar,2018
.
2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளை அழிக்க எங்களுக்கு நிறைய உதவிகளை முஸ்லீம்கள் செய்தார்கள். அவர்கள் தமிழ் பேச வல்லவர்கள் என்பதனால் புலிகளின் இடங்களுக்குள் ஆள ஊடுருவி, எல்லா தகவல்களையும் எங்களுக்கு தந்தார்கள். மக்களோடு மக்களாக கலந்து எமக்கு புலனாய்வு தகவலை தந்ததும் அவர்களே... அப்படிப்பட்ட நல்லவர்களை எமது சகோதரர்களை சில சிங்களவர் அடிக்கிறார்கள். இப்படி அடிக்க வேண்டாம்... உடனே நிறுத்துங்கள் என்று மன்றாடியுள்ளார் ராணுவப் பேச்சாளர்.
சந்தேகமா , இதோ வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பில் உள்ள தேரர் ஒருவர் முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் சிலரை சந்தித்து, உங்கள் மேல் நீதிமன்றில் உள்ள எல்லா வழக்குகளையும் நான் இல்லாமல் செய்கிறேன். முஸ்லீம்களை அடிக்கவேண்டும், உங்களிடம் ஆயுதம் இருந்தால் ஒரு நாள் மட்டும் என்னோடு வாருங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு முன் நாள் புலிகள் மறுக்கவே. மீண்டும் மீண்டும் வலியுறுத்திய பிக்குவின் பேச்சை பதிவு செய்து பொலிசாரிடம் கொடுத்துள்ளார்கள்.
யார் உண்மையில் பெரியவர்கள் ? இனியாவது புரியவேண்டிய நபர்களுக்கு சில விடையங்கள் புரியவேண்டும்...இனியாவது இவர்கள் திருந்தவேண்டும்... சிங்களவரோடு இவ்வளவு ஒட்டியிருந்த நபர்களுக்கே அடி விழுகிறது என்றால் . சம்பந்தன் , சுமந்திரன் பாடு நாளை என்ன ஆகுமோ தெரியவில்லை...துண்டை காணோம் துணியைக் காணோம் என்று ஓடும் நாள் வரும்...