இவரிண்ட லாஜிக்கே போக்கிலித்தனமானது. நடந்த உள்ளூர் ஆடசி தேர்தலில், மக்கள் பெருவாரியாக வாக்களித்த, இவரது தாமரை மொட்டு புதுக் கட்சிக்கு பாராளுமன்றில் ஒரு எம்பியும் இல்லை. இவரும் இவரது சகாக்களும் சுதந்திரக்கட்சி எம்பிக்கள், மொத்தம் 95 பேர். ரணில் ஐ தே கட்சிக்கோ 105.
நடந்த தேர்தலில் பயங்கர அடி வாங்கிய கட்சி சுதந்திர கட்சி, மூன்றாவது இடம். அரசாங்கமோ இரண்டும் சேர்ந்த கூட்டு.
இவர் கேட்பது என்னவென்றால், மக்களால் நிராகிரிக்கப்பட்ட, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட, சுதந்திர கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமாம்... அல்லது தனது தலைமையில் எதிர்க்கட்சி ஆக வேண்டுமாம்.
எப்படி தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்றால், எம்பிகளை விலைக்கு வாங்குவதை தவிர வேறு வழி இல்லை. எப்படி அரசிலும், எதிர்கட்சியிலும் இருக்க முடியும் என்றால், பதில் இல்லை.
ஒரு நியாயமான தலைவராயின், இரண்டு வருடங்கள் காத்திருந்து, பொது தேர்தலில் வென்று வர வேண்டும். பொறுமை இல்லை.
இவர் குடும்பம் மீதான வழக்குகளை இறுக்காமல் விட்டமைக்கான தவறுக்காக, பலத்த விலையை செலுத்தி விட்ட, ரணில், இம்முறை, இன்று, தானே சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துள்ளார்.
மேல் நாடுகள், இந்தியாவின் அழுத்தில், இந்த வழக்குகள் மேலும் இறுகி, அடுத்த பொது தேர்தலுக்கு முன் அவருக்கான ஆப்பு இறுகும்.
மகிந்த பதவிக்கு வருவது, ஈழம் ஆதரவாளர்களுக்கு நல்லது தான். ஆனாலும், இவரை சீனா, இந்திய, மேல் நாடுகள் எதுவுமே விரும்பவில்லை என்பதே நிதர்சனம்