பிரியங்கவுக்கு கட்டநாயக்காவில் பலத்த வரவேற்ப்பு: VIP அறை ஊடாக கூட்டிச் சென்ற சிங்கள அதிகாரிகள்
23 Feb,2018
..
லண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டிய பிரியங்க தற்போது இலங்கை சென்றுள்ளார். டுபாய் வழியாக இலங்கை செல்லும் ஸ்ரீலங்க ஏர்வேஸ் விமானம் மூலமே இவர் கொழும்பு கட்டநாயக்கவை சென்றடைந்தார். செல்லும் போது முதல் தர வரிசை(பிசினஸ் கிளாஸ்) இருக்கை கொடுக்கப்பட்டுள்ளதோடு. கொழும்பு சென்றடைந்த அவரை வி.ஐ.பிக்களையும், மந்திரி மார்களை கொண்டு செல்லும் , சிறப்பு அறை ஊடாக அவரை அழைத்துச் சென்று , கறுப்பு நிற BMW காரில் கொண்டு சென்றுள்ளார்கள்.
அவர் கொழும்பு வந்தவேளை, சிங்கள அதிகாரிகள் கை குலுக்கி அவரை ஹீரோ போல வரவேற்றுள்ளார்கள். ராஜ மரியாதையோடு அவரை ஏற்றிச் சென்றுள்ளார்கள். தாம் விசாரிக்க தான் அவரை அழைத்தோம் என்று கூறியுள்ள ராணுவப் பேச்சாளர். அவர் எதுவும் பாரதூரமாக குற்றங்கள் புரியவில்லை என்றும் கூறியுள்ளார். பிரியங்காவை பதவி உயர்த்தி , வேறு ஒரு நாட்டுக்கு தூதுவராக அனுப்ப சிங்களம் முனையலாம் என்று கூறப்படுகிறது.
இதேவேளை பிரித்தானியாவுக்குள் அவர் மீண்டும் வர , இடைக்கால தடையை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு விதித்துள்ளது என விடையம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள்.