ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி உத்தரவு! இலவச வைபை அவசியமில்லை
20 Feb,2018
உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த டெப்களை உடனடியாக இரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இன்று கூடிய அமைச்சரவையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4 பில்லியன் ரூபாய் என்ற பாரிய தொகை செலவிடப்படுகின்றமையினால் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான திட்டம் அவசியமில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை அமைச்சர்களின் இணக்கப்பாடு கிடைத்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளுக்கமைய இவ்வாறான தொழில்நுட்ப வேலைகள், இலவச வைபை மக்களுக்கு முக்கிய தேவை அல்ல என அமைச்சரவை கூட்டத்தின் போது கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலவச வைபை வசதிகளுக்காக காத்திருந்த இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு பாரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.