பாணந்துறை கடலில் மிதந்து கொண்டிருந்த வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு
08 Feb,2018
பாணந்துறை கடலில் மிதந்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் சடலம் பாணந்துறை பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை பிரதேசவாசி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டது
பொலிஸ் கடற்பிரிவின் சுழியோடிகளின் உதவியுடன் கடலில் மிதந்து கொண்டிருந்த சடலம் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உயிரிழந்திருப்பது சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பாணந்துரை ஆதார வைத்தியசாழலயில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.