இலங்கையில் சித்ரவதை முகாம்கள் இல்லை: சிறிசேனா
05 Feb,2018
கொழுமபு: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் சித்ரவதை முகாம்கள் இல்லை என அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறினார்.
இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போர் 2009-ம் ஆண்டு முடிவுற்றது. அப்போது தமிழர்கள் பலரும் காணாமல் போனார்கள். இவர்கள் கைது செய்யப்பட்டு ரகசியமான இடங்களில் வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அப்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்சே மீது குற்றம்சாட்டின..
இந்நிலையில் யாழ்ப்பாணம் மாகாண உள்ளூர் கவுன்சில் தேர்தல் பிப்.10-ம் தேதி நடக்கிறது. இதில் பிரசாரம் செய்ய வந்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியது, இலங்கையில் போருக்கு பின்னர் காணாமல் போன தமிழர்கள் குறித்தும் அவர்களை கண்டறிவது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களின் உறவினர்களிடம் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் காணாமல்போனவர்கள் ரகசிய முகாம்களில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவலில் .உண்மையில்லை. அப்படி ஒரு சித்ரவதை முகாம் இலங்கையில் இல்லை என்றார்.