மீண்டுமொரு யுத்தம் ஏற்படாதவாறுக்கும் வாக்களியுங்கள் ஜனாதிபதி.
02 Feb,2018
நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாதவாறுக்கும் கைச்சின்னத்திற்கு வாக்களியுங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெரியகல்லாற்றில் தெரிவிப்பு.
நல்லதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கைச்சின்னத்திற்கு வாக்களியுங்கள் என ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் உள்ள மூன்று உள்ளுராட்சி மன்றகளிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வைத்து பேசுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.
பட்டிருப்பு தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரசாரக்கூட்டம் புதன்கிழமை (31.1.2018) மாலை 6.45 மணியளவில் அமைப்பாளர் ரீ.கெங்காதரன் தலைமையில் பெரியகல்லாற்றில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்குமாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம, மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் களுதாவளை,வெல்லாவெளி, பட்டிப்பளை போன்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டார்கள். முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை வெற்றிலை கொடுத்து வரவேற்றார்கள்.இதன்போது அலுவலக பதிவேட்டில் விஷேடமாக கையொப்பம் இடுகையிட்டார்.பிரசாரக்கூட்டத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஆதரிக்குமாறும் கைச்சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் அறைகூவல் விடுத்தார்ர்.
அவர் தொடர்ந்து பேசுகையில் :-
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி இடம்பெறும் தேர்தலில் நீங்கள் கைச்சின்னத்திற்கு வாக்களிக்கும்படி நான் உங்களை கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்.முழுநாடு பூராகவும் கைச்சின்னமே வெற்றிபெறும் என்பது உண்மையாகும்.நாங்கள் சில பிரதேசங்களில் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.இன்னும் சில பிரதேசங்களில் குதிரைச்சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.நாங்கள் மலையத்தில் சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.நாங்கள் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் மிகச்சிறந்த வெற்றியைப் பெறவிருக்கின்றோம்.அந்த வெற்றிக்காகத்தான் கைச்சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று உங்களைப் பார்த்து கூறுகின்றோம்.நான் மூன்று வருடங்களுக்கு பின்பு இன்று உங்களை சந்திப்பதற்கு அரசியல்கூட்டத்திற்கு நான் வந்திருகின்றேன்.நான் இந்தப்பகுதியிலே இருந்தற்காகத்தான் நான் வந்திருக்கின்றேன். உண்மையில் ஜனாதிபதி தேர்தலின்போது நீங்க அனைவரும் எனக்குத்தான் வாக்களித்து என்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்துள்ளீர்கள்.அதற்கு என்னுடைய கௌரவமான நன்றிகளை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நாங்கள் இந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் உங்களதும்,என்னுடையதுமான உறவுக்காரர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் வேட்பாளராக உங்கள்முன் நிறுத்தியுள்ளோம்.அவர்களின் கட்சியும்,என்னுடைய கட்சியுமான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சின்னமுமான கைச்சின்னத்திற்கு வாக்களித்து, அவர்களை இப்பிரதேச உள்ளுராட்சி மன்றத்தை எமது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றுவதற்கும்,ஆட்சி அமைப்பதற்கும் நீங்கள் வாக்களியுங்கள்.இந்தப்பிரதிநிதிகள் உங்களின் பிரதிநிதி மட்டுமல்ல என்னுடைய பிரதிநிதிகளும்தான்.இவர்களை வெற்றிப்பெறச்செய்யுங்கள்.அவர்கள் வெற்றி பெற்றதற்குபிற்பாடு இப்பிரதேசத்தை நான் அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதற்குரிய எல்லா வசதிவாய்ப்புக்களையும்,பணத்தையும்,இந்தப்பிரதிநிதிகளுக்கு வழங்குவேன்.நல்லதொரு நாட்டை கட்டியெழுப்புவோம்.அதுதான் என்னுடைய தேவையாகும்.மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவாறு நாட்டைக்கட்டியெழுப்ப வேண்டும்.சிங்கள- தமிழ்,முஸ்லிம் மக்கள் சகோதர்களாக வாழவேண்டும்.எல்லாப்பிள்ளைகளும் ஒன்றாக சகோதரத்துவமாக வாழவேண்டும்.இந்தப்பிரதிநிதிகள் மூலம் இந்தச்சேவையை பெற்றுத்தருவேன். எனத்தெரிவித்தார்.