குடியுரிமையை இரத்து செய்தாலும் பயணத்தை தொடருவேன் : மகிந்த
28 Jan,2018
தனது குடியுரிமையை இரத்து செய்வதற்கு முயற்சிப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது குடியுரிமையை இல்லாது செய்தாலும் தான் மக்கள் பணிகளை கைவிட மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்
அம்பாறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குடியுரிமையை நீக்குவதற்கு எத்தகைய சட்டம் ஒன்று உள்ளதென்பது தெரியவில்லை. அவ்வாறு குடியுரிமையை நீக்கினாலும் தமது அரசியல் பணிகள் தொடரும் என அவர் அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.