அமெரிக்காவில் முதலிடம் பிடித்த இலங்கை! இரண்டாம் இடத்தில் பிரான்ஸ்
11 Jan,2018
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு சிறந்த பாதுகாப்பு உள்ளதாக அந்த நாட்டு அரசாங்க திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுலாப் பயணம் செய்ய உகந்த நாடுகள் தொடர்பான வழிகாட்டி அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இலங்கை ஆபத்தான நாடு என பெயரிடப்பட்டிருந்தது.
அமெரிக்க அரசாங்க திணைக்களம், நாடுகளில் உள்ள பாதுகாப்பின் கீழ் 4 பிரிவுகளாக பிரித்துள்ளது. அதன் முதலாவது பிரிவில் உயர் பாதுகாப்பு கொண்ட நாடுகளையும், 4வது பிரிவில் பாதுகாப்பற்ற நாடுகளையும் பிரித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கு இலங்கை, அவுஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, நியுசிலாந்து, சிங்கப்பூர், மியன்மார், தாய்லாந்து, வியட்னாம், மலேசியா ஆகிய நாடுகளை ஒரே குழுவில் இணைப்பதற்கு அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சீனா, இந்தியா, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, மெக்சிகோ, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இங்கு ரஷ்யா மூன்றாவது குழுவில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஆபத்து அதிகான 4வது பிரிவில் ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், மத்திய ஆபிரிக்கா, லிபியா, மாலி, சோமாலியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகள் உள்ளடக்கபட்டுள்ளது.