வைரஸ் காய்ச்சலினால் வடக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதுஸ
30 Dec,2017
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர், இன்று (30.12.17) யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். 44 வயதுடைய முல்லைத்தீவைச் சேர்ந்த இந்தப் பெண் வைரஸ் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத்தரப்புகள் தெரிவித்துள்ளன.. இவரின் உயிரிழப்புடன் வைரஸ் காய்ச்சலினால் வடக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
நோயால் பாதிக்கப்பட்ட இந்தப் பெண், முதலில் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் மருத்துவமனைக்கு இடம்மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காது உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது