கடலில் மூழ்கி இரண்டு வௌிநாட்டுப் பிரஜைகள் உயிரிழப்பு
30 Dec,2017
ஹபராதுவை கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு வௌிநாட்டுப் பிரஜைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.ஹபராதுவை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பெண் ஒருவர் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
67 வயதுடைய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதுதவிர ஹபராதுவை, ஹெடீவத்தை பிரதேச கடலில் நீராடிக் கொண்டிருந்த 38 வயதுடைய போலாந்து நாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்.
அவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.