டி.வி. தொகுப்பாளினி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு
20 Dec,2017
சென்னை: பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாராம்.
பிரபலமான டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் டிடி எனப்படும் திவ்யதர்ஷினியும் ஒருவர். தனது பேச்சால் அனைவரையும் கவர்ந்துள்ளார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
சினிமா படங்களிலும் நடித்து வருகிறார்.
டிடிக்கும் அவரது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்திற்கு பிறகு டிடி படங்களில் நடிப்பது அவரின் கணவர் வீட்டாருக்கு பிடிக்கவில்லை. இதனால் டிடிக்கும் அவரது கணவர் ஸ்ரீகாந்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
கணவர் வீட்டார் எதிர்த்தாலும் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, படங்களில் நடிப்பதை டிடி நிறுத்தவில்லை.
இதனால் பிரச்சனை பெரிதாகி டிடியும், அவரது கணவரும் பிரிந்து வாழத் துவங்கினர். பவர் பாண்டி படத்தின் டைட்டிலில் செல்வி டிடி என்று குறிப்பிடப்பட்டதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரிந்து வாழும் டிடியும், ஸ்ரீகாந்தும் பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்புவதாகக் கூறி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்