கே.பி மீது திரும்பியது யானைக் கட்சியின் பார்வை;
08 Dec,2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் கைது செய்யப்பட்டவருமான கே.பி என்று அறியப்படும் குமரன் பத்மநாதன் மீதான நடவடிக்கை குறித்து வெகுவிரைவில் தகவல்களை அம்பலப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்றது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சு நடத்தி விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி இந்த தகவல்களை வெளியிட தயாராவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்று நடைபெற்றது.
இதன்போது குமரன் பத்மநாதன் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கபீர் ஹாஷிம், பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி கே.பி தொடர்பில் அடுத்த கட்டநடவடிக்கை குறித்து தீர்மானம் எடுப்பதோடு தகவல்களையும் ஊடகங்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.