பிரபாகரனை புகழ்ந்த ஞானசார தேரர்
29 Nov,2017
பிரபாகரனின் போராட்டம் தவறானது அல்ல, எனினும் அவர் போராட்டத்திற்காக தெரிவு செய்த பாதையே தவறானது. எனினும் இன்றைய அரசியல் வாதிகளை விடவும் பிரபாகரன் நேர்மையாக செயற்பட்டார் என பொது பல சேனா பௌத்த அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் புலிகளை நினைவு கூறுவது ஆச்சரியாமான விடயம் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுபல சேன பௌத்த அமைப்பின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.