கோதபாயவை கைது செய்ய ஜனாதிபதி அனுமதி வழங்கவில்லை
24 Nov,2017
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு காவல்துறையினர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோதபாயவின் பெற்றோர்களான டி.ஏ. ராஜபக்ஸ தம்பதியினரின் நினைவுத் தூபி அமைப்பது தொடர்பில் 90 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முக்கிய பிரபு ஒருவரை கைது செய்யும் போது ஜனாதிபதியின் அனுமதி பெற்றுக் கொள்வது தற்போது வழமையாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினரும், சட்ட மா அதிபர் திணைக்களமும் சுயாதீனமாக இயங்க வேண்டுமென பிரதமரும் சட்டம் ஒழுங்கு அமைச்சரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது