கோட்டாபய விரைவில் கைது செய்யப்படுவார்.
21 Nov,2017
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவை விரைவில் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகந்ததாச விளையாட்டரங்கில் இன்று(21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசுக்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தற்போதைய அரசு பலிவாங்கும் நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்றால் அவர்களின் முதலாவது இலக்கு தான் என்றும்,அதற்கு பிறகு குடும்ப உறுப்பினர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும்" மஹிந்த தெரிவித்துள்ளார்.
"எனவே வெகுவிரைவில் கோட்டாபயவை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,அரசு மற்றும் அரசமைப்புக்கு எதிராக 'வெளிச்சம்'அமைப்பினால் நாடுபூராகவும் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடலை தடுக்கும் முகமாகவே அரசு கோட்டாபயவை கைது செய்ய முயல்வதாகவும்"மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.