யாழில் சுனாமியா? அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் முக்கிய அறிவிப்பு
19 Nov,2017
யாழில் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் பரவினால் உடனடியாக தம்மை தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தினால் மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
117 என்ற இலவச அவரச தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் அறிந்து கொள்ளுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை பெற்றுக்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவத்தின் உதவிப் பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் அண்மைய நாட்களாக சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுவதுடன் இடம்பெயர்கின்ற சூழ்நிலைகளும் ஏற்பட்டுள்ளன.எனவே இவ்வாறான பொய்யான தகவல்களை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம்.
பொதுமக்கள் மத்தியில் ஏதாவது இயற்கை அனர்த்தம் தொடர்பான தகவல் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக இலவச அவசர தொலைபேசி இலக்கமான 117 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி, உங்கள் பிரதேசங்களில் இயற்கை அனர்த்த பதிப்புகள் ஏதாவது உள்ளனவா? அல்லது அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா? என உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.