இராணுவத் தளபதியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவு
16 Nov,2017
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ். நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செலியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி நாவக்குளி பிரதேசத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் 24 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (15) யாழ். நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவை நீதிபதி விடுத்துள்ளார்.