(R.அன்டனி)
இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் பிரிட்டனின் பிரபுக்கள் சபை உறுப்பினர் லோர்ட் நெஸ்பி தெரிவித்த கரு
த்து தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தி யாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளருக்கும் ஊடகவியலாளர் ஒருவருக்குமிடை
யில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என பிரிட்டனின் பிர
புக்கள் சபை உறுப்பினர் லோட் நெஸ்பி தெரிவித்துள்ள நிலைமை தொடர்பில் அமைச்
சரவையில் பேசப்பட்டதா என ஊடகவிய
லாளர் கேள்வி எழுப்பினார். அத்துடன் இந்த
லோட் நெஸ்பியின் கூற்றை கவனத்திற் கொண்டு ஏன் சர்வதேச தரப்பில் அதனை கொண்டு இலங்கை அரசாங்கம் நன்மையடையாமல் இருக்கின்றது என்றும் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர, நீங்கள் கூறுவதைப் போன்று அரசாங்கம் செயற்பட முடியாது லோட் நெஸ்பி முன்வைத்த கருத்துக்களை நாங்கள் பாராட்டுகின்றோம். அவருக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் அவரின் கூற்றையும் ஜெனிவா விவகாரத்தையும் சம்பந்தப்படுத்த முடியாது.
நீங்கள் வேண்டுமென்று இந்தப் பிரச்சினையை குழப்புவதற்காக இங்கு வருகிறீர்கள். தயவு செய்து இவ்வாறு செய்ய வேண்டாம். உங்களது வித்தியாசமான பார்வையை இதில் செலுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் நீங்கள் இதற்கு முன்னரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் நான் தெரிவிக்
காத விடயங்களை தெரிவித்ததாக கூறி அறி
க்கை வெளியிட்டிருந்தீர்கள் அது முறையானதல்ல.
ஊடகவியலாளர் ; நான் அப்படி செய்யவில்லை.
அமைச்சர் ; இல்லை. நீங்கள் அவ்வாறு தான் செய்திருந்தீர்கள். நீங்கள் இன்றும்
கூட இதனை குழப்புவதற்கே வந்திருக்கின்றீர்கள். அமைச்சரவையில் பேச வேண்டிய விடயங்களை நாங்கள் பேசுவோம். எதனை எங்கு பேச வேண்டும் என்று எங்க
ளுக்குத் தெரியும். உங்களுக்கு தேவையான வகையில் நாம் செயற்பட முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். எனினும்
தொடர்ந்து அமைச்சருக்கும் ஊடகவியலா ளருக்குமிடையே முரண்பாடான கருத்துக் கள் முன்வைக்கப்பட்டன.