2 மில்லியன் ரூபா போலி நாணயத் தாள்களுடன் அரியாலையில் தம்பதியர் கைது!!
06 Nov,2017
போலி நாணயத்தாள்களை அச்சிட்டு உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இளம் தம்பதியர் இன்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 21 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், அரியாலை – மணியந்தோட்டம் பகுதியிலுள்ள அவர்களின் வீட்டில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 400உம், ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 148 உம் கைப்பற்றப்பட்டன. அவற்றை அச்சிடப் பயன்படுத்தப்பட்டன என்று நம்பப்படும் பிறின்டர், ஸ்கானர் மற்றும் மடி கணினி என்பனவும் மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் அங்கு சென்றவேளை குடும்பத் தலைவர் வீட்டில் இல்லை. அவரது மனைவி கைது செய்யப்பட்டார். குடும்பத்தலைவர் பின்னர் கைது செய்யப்பட்டார். இருவரும் நாளை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
கணவர் 24 வயதுடையவர் என்றும், மனைவி 19 வயதுடையவர் என்றும் கூறப்படுகின்றது