முல்லைத்தீவுக்கு 9ஆயிரம் வீடுகள்
01 Nov,2017
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 2018ஆம் ஆண்டில் 9 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடாக இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன என மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது; முல்லைத்தீவு மாவட்டத்துக்கு தற்போது 14 ஆயிரம் வீடுகள் தேவை. இந்த நிலையில் 2018ஆம் ஆண்டில் தேசிய நல்லிணக்க அமைச்சு 9 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளது.
அந்த வீடகள் கிடைக்கப்பெற்றால் மாவட்டத்தில் வீடு தொடர்பில் உள்ள நெருக்கடி 75 வீதம் தீர்த்து வைக்கப்படும். இதேநேரம் எமது மாவட்டத்துக்குக் கிடைத்த 9 ஆயிரம் வீடுகளையும் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 3 ஆயிரத்து 325 வீடுகள் என்ற சம அடிப்படையிலும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 450 வீடுகளும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்கு 500 வீடுகளும் அதேபோன்று மாந்தை கிழக்குப் பிரதேச செயலர் பிரிவுக்கு 400 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வெலிஓயாவுக்கு நீண்ட காலம் இடம்பெயர்ந்தவர்களுக்கான வீடுகள் என்ற அடிப்படையில் மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாக வீடுகள் வழங்கப்படவுள்ளன – என்றார்.-