முல்லைத்தீவு பெருங்காட்டுப்பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள்
17 Oct,2017
முல்லைத்தீவு பெருங்காட்டுப்பகுதியில் அபாயகரமான இராணுவ வெடிபொருட்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுப்பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் இறுதி யுத்தத்தின் போது இந்த பகுதியில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்றை வைத்திருந்திருக்காலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதே வேளை குறித்த காட்டுப்பகுதியில் இருந்து வவுனியா நெடுங்கேணி மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு கனரக வாகனங்களின் ஊடாக வெடிபொருட்களை கொண்டு செல்லக்கூடிய தரைவழிப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் யுத்தகாலத்தில் அந்த இடத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தற்பொழுது அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்படும் அபாயகரமான வெடிபொருள் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.