பொலிஸ் பாதுகாப்பும் வாகனமும் தருகிறேன் எங்கு இரகசிய முகாம் இருக்கிறதோ அங்கு சென்று பார்வையிடுங்கள்”..
14 Oct,2017
கிளிநொச்சிக்கு பயனித்த ஜனாதிபதி மைதிரிபால சிறசேன காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களை கிளிநொச்சியில் இடம்பெற்ற இரண்டாவது நிகழ்வில் சந்தித்து கலந்துரையாடினாா்.
காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஜனாதிபதியை பிரத்தியேகமாக சந்திக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு வாகன ஏற்பாடு செய்வதாகவும், எனவே அங்கு வந்து சந்தித்திக்குமாறும் கூறினாா்.
இதனை ஏற்றுக்கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளித்தனா்.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஜனாதிபதியிடம் தங்களின் பிள்ளைகள் இரகசிய முகாம்களில் இன்னும் இருப்பதாக குறிப்பிட்டனா்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி சிறப்பு வாகன ஏற்பாடும் பொலீஸ் பாதுகாப்பும் வழங்குகிறேன் நீங்கள்( காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்) எங்கு இரகசிய முகாம் இருக்கிறதோ அங்கு சென்று பார்வையிடுமாறும் கூறினாா்