இலங்கை – இந்தியா இடையே கூட்டு இராணுவப் பயிற்சி! – நாளை பூனேயில் ஆரம்பம்
12 Oct,2017
இந்தியா – இலங்கை இராணுவத்தினர் எதிர்வரும் 13ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
பூனேயில் நடைபெறும் இக்கூட்டு இராணுவப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இன்றைய தினம் இலங்கையிலிருந்து இராணுவக் குழாமொன்று இந்தியா சென்றுள்ளது.
எதிர்க்கிளர்ச்சிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்கான கூட்டு மூலோபாயங்களை உருவாக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் இதன்போது அளிக்கப்படவுள்ளன.
இரு நாடுகளிலும் இராணுவ நடைமுறைகளை சிறந்த முறையில் பரிமாறி, இரு இராணுவங்களுக்கிடையே ஒரு வலுவான உறவைக் கட்டியெழுப்புவதே கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும்.