கடல், வான் நிலப்பரப்புக்களை மஹிந்தவே விற்றார்.!
09 Oct,2017
நாட்டின் கடன் சுமையை நீக்கவே நாட்டின் நிலப்பரப்பை குத்தகைக்கு வழங்குகின்றோம். கூட்டு எதிரணியினர் நாட்டை விற்பதாக கூச்சலிடுகின்றனர். போராட்டம் நடத்துகின்றனர். எனினும் முன்னைய ஆட்சியின் போது நாட்டுக்கு சொந்தமான கடற்பரப்பு, வான்பரப்பு, நிலப்பரப்பை ராஜபக் ஷவினரே விற்றதாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். நாட்டின் ஒரு அடி நிலத்தை கூட விற்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் ஏற்பாட்டில் விசேட நடமாடும் சேவை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர். இங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மனோ கணேசன் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டை விற்கப் போவதாக கூறி அம்பாந்தோட்டையில் கூட்டு எதிரணியினர் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். எனினும் இந்த அரசாங்கம் நாட்டின் ஒரு அடி நிலத்தை கூட விற்காது. அது நிச்சயமாகும்.
குத்தகைக்கே கொடுத்து வருகின் றோம். முன்னைய ஆட்சியின் போது பெறப்பட்ட அதியுச்ச கடன் சுமையை நீக்கவே நிலங்களை குத்தகைக்கு வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்பிரகாரமே குத்தகைக்கு வழங்குகின்றோம். இல்லையேல் பொருளாதாரத்தை நல்லதொரு நிலைமைக்கு கொண்டு வர முடியாது.
ஆனால் நாம் குத்தகைக்கு மாத்திரமே வழங்குகின்றோம். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது குத்தகைக்கு அன்றி விற்கப்பட்டது.
எனினும் நல்லாட்சி அரசாங்கம் நிலங்களை விற்பதாக எடுத்துக்கொள்வோமே. ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு சொந்தமான வான்பரப்பும், கடற்பரப்பும், நிலப்பரப் பும் விற்கப்பட்டது.
இவையனைத்தையும் விற்று விட்டு தற்போது வந்து கூச்சலிட்டு, போராட்டம் நடத்தி மக்களுக்கு தாம் நாட்டை விற்பதாக கூறுகின்றனர். முன்னைய ஆட்சிக் காலத்தில் அனைத்து நிலப்பரப்புக்களையும் விற்றது ராஜபக் ஷவினரேயாவர். இவைய னைத்தையும் முன்னா ள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவே முன்னெ டுத்தார் என்றார்.