யானைகள் ஊருக்குள் வராமல் தவிர்க்க காடுகளில் மரங்கள்-உண்ணும் மரங்களை கூடுதலாக நட நடவடிக்கை.
08 Oct,2017
யானைகள் பெருமளவில் காணப்படும் காடுகளில் அவை உணவாக உண்ணும் மரங்களை கூடுதலாக நடுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் காடுகளில் நிலவும் உணவு பற்றாக்குறை காரணமாகவே யானைகள் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குள் ஊடுருவி வருவதாக கூறினார்.
இதன் காரணமாக மக்களின் உயிர்களுக்கு ஆபத்துகள் ஏற்படுவதாக கூறிய அமைச்சர், வீடுகள, விவசாயப் பயிர்கள் போன்ற மக்களின் சொத்துக்களுக்கு பாரிய அழிவு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
விசேடமாக வட மத்திய மாகாணங்களில் இருக்கின்ற எல்லை கிராமங்களில் இந்த பிரச்னை பிரதானமாக காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
எனவே காடுகளுக்குள் யானைகள் உண்ணும் உணவு பொருட்களை அதிகரிப்பதன் மூலம் யானைகள் மக்கள் வசிக்கும் பிரதேசங்களுக்குள் ஊடுருவுவதை தடுக்க முடியும்
எனவே காடுகளுக்குள் யானைகள் உண்ணும் உணவு பொருட்களை அதிகரிப்பதன் மூலம் யானைகள் மக்கள் வசிக்கும் பிரதேசங்களுக்குள் ஊடுருவுவதை தடுக்க முடியுமென்று இந்த பிரச்னை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவொன்றினால் முன்வைக்கப்பட யோசனைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி யானைகள் பெருமளவில் வசிக்கும் காட்டு பிரதேசங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்தார்.