வடக்கு, கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும்- என்கிறார் கருணா
07 Oct,2017
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும் ஆனால் ‘ வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் தெரியாது’ என கருணாம்மான் என்றழைக்கப்படும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு, கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
அதில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘வடக்கு, கிழக்கு இணைந்து இருக்க வேண்டும் என்பது புதிய கருத்தல்ல. அது தந்தை செல்வாவின் கூற்றாகும். இதனை யாரும் மாற்ற முடியாது. எங்களுடைய கட்சி, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டுமென்ற கருத்தையே கொண்டுள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டார்