வடக்கு, கிழக்கை இணைக்கும் முயற்சிகள் முறியடிக்கப்படும்ஸ
05 Oct,2017
புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதனை எதிர்த்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கிழக்கு மக்கள் அமைப்பின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜயந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளில் வடக்கு, கிழக்கு இணைப்பு, ஆளுநர்களின் அதிகாரங்களை குறைப்பது, மாகாண காவல்துறைமா அதிபர்கள் மற்றும் ஆளுநர் ஆகியோர் முதலமைச்சருக்கு பொறுப்புக் கூற வேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த யோசனைகள் அனைத்தும் பிரிவினைக்கு வழியமைப்பதாக அமைந்திருப்பதாகவும் அதனை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ள ஜயந்த , வடக்கு, கிழக்கு இணைப்பை இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அமெரிக்காவோ, தமிழ் புலம்பெயர் அமைப்புக்களோ தீர்மானிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.