ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த 200 பெண் பணியாளர்கள் திடீரென மயக்கம்
04 Oct,2017
நோர்வூட் ஆடைத்தொழிற்சாலையினுள் சுவாசிப்பதற்கு போதுமான ஒட்சிசன் வாயு போதுமானதாக இல்லாமையாலே 235 பெண் ஊழியர்கள் மயக்கமடைந்ததாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை தலைமை வைத்திய அதிகாரி திலின பெரேரா தெரிவித்தார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் இன்று காலை 9.45 மணியளவில் கடமையிலிருந்த பெண் ஊழியர்கள் திடீரென மயைக்கமுற்று வீழ்ந்துள்ளனர்.
மயக்கமுற்றவர்களில் 135 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையிலும் மிகுதி ஊழியர்கள் 100 பேர் கொண்ட வைத்திய குழுவினரால் ஆடைத்தொழிற்சாலை வளாகத்தில் சிகிச்சையளிக்கப்பட்டதாக வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
ஆடைத்தொழிற்சாலையானது கண்ணாடிகளினால் முடப்பட்ட நிலையில் காணப்படுவதாலும் 850 பேர் வரையில் கடமையாற்றும் நிலையில் சுவாசிப்பதற்கு போதுமான காற்று உள்வராமையாலும் வெப்பகால நிலையாலும் இவ்வாறு மயக்க நிலை ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் திடீரென மயக்கமுற்றவர்களை வைத்தியசாலையில் கொண்டு சென்ற போதும் வைத்தியசாலை வளாகத்திற்கும் ஆடைத்தொழிற்சாலை வளாகத்திற்கும் நோர்வூட் பிரதேச மக்கள் படையெடுத்தமையினால் பதற்ற நிலை தோன்றியது
சம்பவத்தில் யாருக்கும் உயிராபத்துக்கள் இல்லை என்றும் சிகிச்சை பெற்று சில வீடு திரும்புவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.