திருகோணமலைல் நங்கூரமிட்டுள்ள அமெரிக்க கப்பல்
03 Oct,2017
அமெரிக்காவின் யுத்தக் கப்பலான லிவைஸ் என்ட் க்ளார்க் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
210 மீற்றர் நீளமானதும் 32 மீற்றர் அகலமானதுமான இந்த கப்பல் இரண்டு உலங்கு வானூர்திகளையும் கொண்டது.
இந்த கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் அங்கு நங்கூரமிட்டிருக்கும்.
தயார்நிலை பயிற்சிகளில் கலந்து கொள்வதற்காக அந்த கப்பல் அங்கு நங்கூரமிட்டிருப்பதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்