அகதிகளால் அவுஸ்ரேலியாவுக்கு நெருக்கடி
03 Oct,2017
பப்புவா நியூகினிக்கு சொந்தமான தீவுகளில் அவுஸ்திரேலியாவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளுக்கு உரிய நலன்களை வழங்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
மானஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 வயதான இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மானஸ் தீவில் இடம்பெறும் 6வது அகதியின் தற்கொலை சம்பவம் இதுவென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவுஸ்திரேலிய அரசாங்கம் கடைபிடிக்கும் அகதிக் கொள்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
கடுமையான இந்த கொள்கையை கைவிட்டு, அவுஸ்திரேலிய அரசாங்கம் அகதிகளுக்கு உரிய நலன்களை வழங்கி, அவர்களது அகதி விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது