பின்லாந்து செல்கிறார் சிறிலங்கா பிரதமர்
01 Oct,2017
ranilசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம், இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கே அவர் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஒன்பது நாட்கள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த நாடுகளில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா பிரதமருடன், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமும், ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.