மனிதர்களே வேறுகிரகத்துக்கு சென்றுவிடுங்கள்: ஹாக்கிங் எச்சரிக்கை
05 May,2017
பருவநிலை மாற்றத்திலிருந்து தப்பித்து உயிர் வாழ அடுத்து 100 ஆண்டுகளில் உலகத்தை விட்டு மக்கள் வெளியேறி விட வேண்டும் என பிரிட்டிஷ் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.
உலகின் மிக மூத்த விஞ்ஞானியாக இருப்பவர் பிரித்தானியாவின் ஸ்டீபன் ஹாக்கிங். உலகில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து. ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், ஹாக்கிங் பி.பி.சி-க்கு ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். அதன் மூலம் ஹாக்கிங்கிடம் இருந்து உலகிற்கு ஒரு எச்சரிக்கை வந்துள்ளது.
அதில், உலகின் பருவ நிலை மாற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு, தொற்று நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால் மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் இன்னும் 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு வெளியேற வேண்டும். மனிதர்கள் வேறுகிரகத்துக்கு சென்றுதான் வாழ வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கிடையே, மனிதர்கள் வேறு கிரகத்தில் வாழ்வது குறித்து ஹாக்கிங் மற்றும் அவரது முன்னாள் மாணவர் கிரிஸ்டோஃபே கல்ஃபர்ட் விண்வெளிக்கு பயணம் செய்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.