...........................
பாலியல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஜோதிடர் பாஸ்கர் முனியப்பா (32) கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.
2014ஆம் ஆண்டு இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டை நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது முனியப்பா ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், நாளையதினம் அவருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாகவும், அவர் சொந்த நாடான இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்கர் முனியப்பா என்ற குறித்த நபர் தான் பிளாக் மேஜிக் மற்றும் காதல் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் சர்வதேச ரீதியாக பிரபலமடைந்துள்ளதாக தெரிவித்து மக்களை ஏமாற்றி வந்துள்ளார்.
முனியப்பாவிடம் வருகை தந்தவரின் உடல்களில் தேசிக்காய், சுண்ணாம்பு துண்டுகளை அவர்களை துன்புறுத்தியுள்ளதாகவும், உண்மைகளை ஒப்புக்கொண்ட அறிக்கையை வாசித்த க்ரவ்ன் வழக்கறிஞர் Paul Zambonini தெரிவித்துள்ளார்.
கணவனை பிரிந்த பெண் ஒருவர் தன்னை கணவருடன் சேர்த்து வைப்பதற்கு முனியப்பாவிடம் உதவிக்கு சென்றுள்ளார்.
முனியப்பா இந்த காதல் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக வாக்குறுதியளித்துள்ளார் என அறிக்கையை வாசித்த வழக்கறிஞர் Zambonini தெரிவித்துள்ளார்.
21 ஆண்டுகளுக்கு திருமண பாதுகாப்பு கிடைக்கும் என முனியப்பா குறித்த பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குறுதியளித்துள்ளார்.
அதன் பின்னர் பெண்ணின் உடம்பில் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் அதன் பின்னர் பிரிந்து கணவரிடம் இருந்து இந்த பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. இதனால் அந்த பெண் தொடர்ந்து முனியப்பாவிடம் செல்ல ஆரம்பித்துள்ளார்.
இறுதியாக 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
சில மாய வித்தைகளை காட்டி அந்தப் பெண்ணை ஏமாற்றியுள்ளார். அதேபோன்று மற்றுமொரு பெண்ணையும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தண்டனையின் பின்னர் முனியப்பா தனது சொந்த நாடான இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பாஸ்கர் முனியப்பாவை விளக்க மறியலில் வைக்குமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் கடந்த பெப்ரவரி மாதம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் அவர் இருப்பிடத்தை மாற்றியமை தொடர்பில் கனேடிய பொலிஸாருக்கு அறிவிக்க தவறியுள்ளார். இதனால் அவரது பிணை நிராகரிக்கப்பட்டு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனக்கு எதிர்கால ஆரூடம் தெரிவதனால் தான் விரைவில் நாடு கடத்தப்படவுள்ளதாகவும் தன்னால் இலங்கை வர வாய்ப்புகள் உள்ளதாகவும் முனியப்பா குறிப்பிட்டுள்ளார்.
32 வயதுடைய இவர் திருமணமானவர் எனவும் அவரின் மனைவி இலங்கையில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.