தேம்ஸ் நதியில் கொட்டப்படும் 10 லட்சம் டன் மனிதக்கழிவு; தீர்வு என்ன?
22 Apr,2017
........................
மக்கள் தொகை அதிகரிக்கும்போது அவர்களின் கழிவுகளின் அளவும் பலமடங்கு அதிகரிக்கும்.
அதில் குறிப்பாக நகர்ப்புற மனிதக்கழிவுகளை பாதுகாப்பாகவும் திறமையாகவும் அகற்றுவது என்பது மிகப்பெரிய சவால்.
லண்டனின் பழைய கழிவுநீரகற்றும் கட்டமைப்பால் அதிகரித்த கழிவுகளை கையாள முடியாததால், தேம்ஸ் நதியில் ஆண்டுக்கு பத்துலட்சம் டன் மனிதக்கழிவு அப்படியே கொட்டப்படுகிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வாக பிரம்மாண்ட புதிய கழிவுநீரகற்றும் கட்டமைப்புக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
உலகின் பழமையான பெருநகரங்களில் ஒன்றான லண்டனின் மனிதக்கழிவுகளை அகற்றும் கட்டமைப்பின் மேம்படுத்தும் இந்த பணி மற்ற பெருநகரங்களுக்கும் உதாரணமாக அமையுமா?