சிங்கள இனத்தை அழிக்க திட்டம்! ஞானசார தேரர்
09 Mar,2017
சிங்கள இனத்தை அழிக்க திட்டம்! ஞானசார தேரர்
நாடு முழுவதும் நடக்கு சட்டவிரோத கருக்கலைப்புகளும் கருத்தரிப்பை தடுக்கும் சத்திர சிகிச்சைகளும் திட்டமிட்ட வகையில், தந்திரமான முறையில் பல காலமாக நடந்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கிருலப்பனையில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த திட்டமானது நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இனமான சிங்கள இனத்தை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சிங்கள இனத்தை அருகிப் போகச் செய்து அழிக்கும் திட்டத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் இதனை மேற்கொண்டு வருகின்றன.
இந்த அமைப்புகளை தடை செய்யுமாறு 2012ம் ஆண்டில் இருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்.
தம்புள்ள சம்பவம் குறித்து தனித்து நோக்காது, இந்த மாபியா பற்றி தகவல் வெளியிடுமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம் எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.