எச்1-பி விசாவைத் தொடர்ந்து எச்-4 விசாவுக்கும் கட்டுப்பாடுகள்
09 Mar,2017
''''''''''''''''''''''''''''''''\
எச்1-பி விசாவைத் தொடர்ந்து எச்-4 விசாவுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்கா திட்டம்?
அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்காக எச்1-பி விசா வழங்கப்படுகிறது. இவ்விசாவின் மூலம் வரும் பணியாளர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு எச்-4 என்ற விசா வழங்கப்படுகிறது. எச்-4 விசாவின் மூலம் வருபர்களும் அமெரிக்காவில் வேறு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் புதிய டிரம்ப் அரசால் விதிக்கப்பட்டுள்ள எச்1-பி விசா மீதான கட்டுப்பாடுகள் இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை வெகுவாக பாதித்துள்ள நிலையில், எச்-4 விசாவின் மூலம் அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கு வேலை வாய்ப்பை குறைக்க டிரம்ப் அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, எச்-4 விசாவில் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் எனஅமெரிக்க நீதித்துறை சார்பில், வாஷிங்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் எச்- 4 விசாவில் அமெரிக்காவுக்கு செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.