குத்தகை ஸ்ரீலங்கான் விமானத்தை பாகிஸ்தான் மீண்டும் ஒப்படைப்பதற்கு
05 Mar,2017
;;;;;;;;
குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையிடம் கொள்வனவு செய்த ஏ-330 விமானத்தை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கான் விமான சேவை நிறுவனத்திடமிருந்து 19 மில்லியன் ரூபா குத்தகையின் அடிப்படையில் பாகிஸ்தான் விமானத்தை கொள்வனவு செய்திருந்தது. அந்த விமானம் லண்டன் மற்றும் இஸ்லாமாபாத்திற்கு இடையில் சேவையில் ஈடுப்பட்டது.
எப்படியிருப்பினும் விமானம் பயணத்தில் ஈடுபடும் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் மணிக்கும் 8000 டொலர் செலவிடப்படுவதாகவும், எதிர்பார்த்தனை போன்ற விமானத்தின் ஊடாக வருமானம் பெற்றுக் கொள்ள முடியாமையினால் பாகிஸ்தான் மீண்டும் அந்த விமானத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் இந்த விமானம் குத்தகை அடிப்படையில் இலங்கையிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொண்டது.
தற்போது வரையில் சர்வதேச விமான சேவையின் பொறியியல் பிரிவை பயன்படுத்தி பாகிஸ்தான் சின்னத்தை நீக்கிவிட்டு ஸ்ரீலங்கன் சின்னத்தை சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.