கனடாவை அச்சுறுத்தி வந்த செல்வக்குமார் சுப்பையா..! 24 ஆண்டுகளின் பின் விடுதலை
21 Jan,2017
கனடாவை அச்சுறுத்தி வந்த செல்வக்குமார் சுப்பையா..! 24 ஆண்டுகளின் பின் விடுதலை
கனடா நாட்டில் 24 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த மலேசிய நாட்டவரான செல்வக்குமார் சுப்பையா இம்மாதம் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுதலையாகும் அவரை மலேசியாவுக்கு நாடுகடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1992ஆம் ஆண்டு கனடா நாட்டு நீதிமன்றத்தால் இருவக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டடை விதிக்கப்பட்டது. குறித்த நபருக்கு எதிராக 19 பாலியல் துஷ்பிரயோக வழக்குகள், 28 போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 1992ஆம் ஆண்டு, அவருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அவரின் தண்டனை காலம் இம்மாதம் 29ஆம் திகதி நிறைவடைகின்றது.
செல்வக்குமார் சுப்பையா விடுதலையாவதை தொடர்ந்து அவர் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்படவுள்ளார். எவ்வாறாயினும், செல்வகுமார் மலேசியாவிற்கு வருவதில் எந்த ஒரு தடையும் இல்லையென மலேசியா அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் இதனை தெரிவித்துள்ளார். எனினும், செல்வக்குமார் தொடர்ந்தும் பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்து வருவார் என காலிட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது