ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கொடியை பறக்கவிடுவது சட்டவிரோதமான செயல் அல்ல
02 Nov,2016
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கொடியை பறக்கவிடுவது சட்டவிரோதமான செயல் அல்ல என சுவீடன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு விதித்துள்ளது.
சுவீடனில் வசித்து வரும் 23 வயதான சிரியா நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஐ.எஸ் அமைப்பின் கொடியை பறக்க விட்டு அதனுடன் புகைப்படும் எடுத்துள்ளார்.
மேலும், இப்புகைப்படத்தை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் வெளியிட்டபோது அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அப்போது நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பளிக்கும்போது, ‘இந்த தீர்ப்பானது மிகவும் ஆலோசனை மேற்கொண்டு பிறகு தான் வெளியிடப்படுகிறது.
சுவீடன் நாட்டில் ஒரு பொது இடத்தில் ஐ.எஸ் அமைப்பின் கொடியை பறக்க விடுவது சட்டவிரோதமான செயல் அல்ல
ஏனெனில், கொடியை பறக்கவிடுவது என்பதை வெறுக்கத்தக்க செயலாக பார்க்க கூடாது.
மேலும், எந்த ஒரு மதத்தினரையும் அல்லது ஒரு சமுதாய அமைப்பையும் குறிப்பிட்டு அவமதிக்கும் வகையில் ஐ.எஸ் அமைப்பு கொடி உருவாக்கப்பட வில்லை என்பதால், அதனை பொது இடத்தில் பறக்க விடுவதும் குற்றமாகாது’ எனக் கூறிய நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமிய வாலிபரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்