இதில் தமிழர்களின் வியாபார நிறுவனங்கள் சிலதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு முதல் பாசின் சவுத்திரி என்னும் நபர், லொயிட்ஸ் வங்கியில் வேலைசெய்யும் 2 பெண்களை தனது கைக்குள் போட்டு. வியாபார நிலையங்களை வைத்திருக்கும் நபர்களின் தகவல்களை பெற்றுள்ளார்.
இதனை வைத்து குறித்த நிலையத்திற்கு தொலைபேசியூடாக தொடர்புகொண்டு. அவர்களது வங்கிக் கணக்கை வேறு நபர்கள் பாவிப்பதாகவும். அதனை தடுக்கவே தான் தொடர்புகொண்டதாகவும் கூறுவார்.
இதனூடாக இன்ரர் நெட் பாங்கிங் பாஸ்வேட்டை அவர் கேட்டு அறிந்து. அவர்களது வங்கிக் கணக்கினுள் சென்று பணத்தை வேறு எக்கவுண்டுக்கு மாற்றிவிடுவார்.
காசு பிற நபர்களால் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் தான் அதனை தடுத்துவிட்டேன் என்றும். உங்கள் காசு 7 நாட்களில் மீண்டும் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும் என்று அவர் ஆறுதல் கூறுவார்.
இதனூடாக 7 அல்லது 10 நாட்களுக்கு குறித்த வியாபார நிலைய உரிமையாளர் அமைதியாக இருப்பார்.
இந்த இடைவெளியில் வேறு வங்கிக்குச் சென்ற காசை மேலும் பிரித்து பல வங்கிக் கணக்கிற்கு அனுப்பி பின்னர் காசை எடுத்துவிடுவார்கள்.
முதலில் தனி நபராக இதனைச் செய்து வந்த அவர். ஒரு முறை சுமார் 2 நிமிடத்தில் 2.3 மில்லியன் பவுண்டுகளை தனது வங்கிக்கு மாற்றி திடீரென பெரும் பணக்காரர் ஆகியுள்ளார்.
லண்டனில் உள்ள மிகவும் ஆடம்பரமான ஹோட்டல் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து. அதில் பல லாப் -டாப் கம்பியூட்டர்களை வைத்து 5 வேலை ஆட்களைப் போட்டு. இதனையே முழு நேரத் தொழிலாக மாற்றியுள்ளார்.
இதனூடாக கடந்த 2 வருடங்களில் அவர் 113 மில்லியன் பவுண்டுகளை களவாக எடுத்துள்ளார்.
750 க்கும் மேற்பட்ட வியாபார நிலையங்களை அவர் குறிவைத்து பணத்தை களவாடியுள்ளார். இதில் சொலிசிட்டர் நிறுவனங்களும் அடங்கும். மேலும் தமிழர் வியாபார நிலையங்களும் அடங்குகிறது.
இவ்வாறு எடுத்த பணத்தின் பெரும் பகுதியை, டுபாய், மலேசியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு மாற்றி அங்கே பல கட்டங்களை அவர் வாங்கியுள்ளார்.
அவர் லொயிட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களை மட்டும் குறிவைக்க வில்லை. பாக்கிளேஸ் , பாங் அப் ஸ்காட்லன் ஆகிய வங்கிகளையும் அவர் குறிவைத்துள்ளார்.
இதனால் இவர் செய்யும் திருட்டு தனத்தை உடனே ஒரு குறித்த வங்கியால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இறுதியில் பிரித்தானிய புலனாய்வுப் பொலிசார் சவுத்திரியை தேட ஆரம்பித்தவேளை அவர் , மிகவும் சூட்சுமமாக பிரான்சுக்கு சென்றுவிட்டார்.
ஆனால் அவரது போறாதகாலம் அவரை விடவில்லை. பிரான்சில் இருந்து அவர் விமானம் மூலம் வெளியேற அவர் ஒரு போலி பாஸ்போட்டை ரெடி செய்துள்ளார்.
ஆனால் அன்றைய தினம் பிரான்ஸ் பாரிசில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தார்கள். இதனை அடுத்து பிரான்ஸ் பொலிசார் விமான நிலையத்தில் வழமைக்கு மாறாக கடுமையான சோதனைகளை மேற்கொண்டார்கள்.
இதில் சவுத்திரி சற்றும் எதிர்பாராமல் கைதாகினார். பின்னரே பிரான்ஸ் பொலிசாருக்கு இவர் யார் என்பது தெரியவர. அவர்கள் அங்கிருந்து சவுத்திரியை நாடு கடத்தியுள்ளார்கள்.
சவுத்திரி கொள்ளையடித்த 113 மில்லியனில் சுமார் 40 மில்லியன் பவுண்டுகளை மட்டுமே பொலிசாரால் இதுவரை மீட்க்க முடிந்தது. மீகுதிப் பணத்தை அவர் கண்டு பிடிக்க முடியாதவாறு பதுக்கியுள்ளார்.